அண்மையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ஏற்கனவே ஒரு சில படங்களில் அவர் நடித்துள்ள நிலையில், 'படைத்தலைவன்' படத்திலும் நடித்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், விஜயகாந்தின் மறைவு காரணமாக படப் பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தனது தந்தையின் மறைவை அடுத்து சோகத்தில் இருந்த சண்முக பாண்டியன், கொஞ்சம் கொஞ்சமாக தனது மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
இவர், படைத்தலைவன் படம் மட்டுமின்றி குற்றப்பரம்பரை என்ற வெப் தொடரிலும் சண்முக பாண்டியன் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இன்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடும் சண்முக பாண்டியனை வாழ்த்தும் வகையில், 'படைத்தலைவன்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு வாழ்த்து சொல்லி இருந்தது.
இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் மிக எளிமையாக நடந்த சண்முக பாண்டியனின் பிறந்த நாளுக்கு, போர்ஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் அவரது அண்ணன் விஜய பிரபாகரன்.
அப்பாவை போலவே தம்பி மீது அன்போடு இந்த ஆண்டு பிறந்தநாளுக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள காஸ்ட்லியான போர்ஷ் சொகுசு காரை வாங்கி கொடுத்திருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Listen News!