• Sep 21 2024

கமல் பாட்டு குறித்து கஸ்தூரியின் விமர்சனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதோடு இப்படம் வருகின்ற ஜூன் மாதம் 3ம் திகதி வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.அந்த வகையில் அனிரூத் இசையில் உருவாகிய பத்தல பத்தல பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பிரபல்யமாகி வருகின்றது.

இப்பாடலுக்கு கமல்ஹாசனும் வேற லெவலில் நடனமாடியுள்ளார்.அதேசமயம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளன.

மேலும் இதுபற்றி நடிகை கஸ்தூரி கூறுகையில், ‛‛சகலகலாவல்லவன் + மார்க்கண்டேயன் = கமல். வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் லிரிக்ஸில் இறக்கிட்டாப்ல. ஒன்றியம்கிற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு'' என விமர்சித்துள்ளார்.

https://www.youtube.com/embed/qcWj_4ZhcMo

பிறசெய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement