• Sep 20 2024

அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தில் ஜோடி சேரும் கதிர் மற்றும் திவ்யபாரதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான மதயானைக் கூட்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் கதிர்,இப்படத்தினைத் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.

அதன்படி விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் ஆகிய படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். பிகில் படத்திலும் முக்ககிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்பொழுது ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து சுழல் வெப் சீரியலிலும் நடித்திருந்தார்.

இதே போல G.V. பிரகாஷ் குமார் நடித்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் திவ்யபாரதி.இப்படத்தை அறிமுக இயக்குநரான சதீஷ் செல்வகுமார் இயக்கியிருந்ததோடு இப்படம் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் நேரடியாக ரிலீஸ் ஆனது.

இதனிடையே, கதிர் - திவ்யபாரதி நடிக்கும் படம் குறித்த புதிய தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, இந்த படத்துக்கு பிரபல நடிகர் அஜித் குமாருடைய பிளாக்பஸ்டர் படத்தின் பெயரை படக்குழு வைக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement