• Sep 20 2024

உயிருக்குப் போராடும் குணசேகரன்... நந்தினியுடன் ரொமான்ஸ் பண்ணும் கதிர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் சொந்த வீடும் ஜீவானந்தம் கைக்குப் போய்விட்டதாக ஆடிட்டர் கூறியதைக் கேட்டதும் நெஞ்சு வலியால் துடிதுடித்து விழுந்த குணசேகரன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.


இந்நிலையில் கதிர் மற்றும் நந்தினி இருவரும் ரொமான்ஸ் பண்ணும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது சாந்தி முகூர்த்த ஏற்பாடுகளுடன் இருவரும் ரொமான்ஸ் பண்ணும் வகையில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் "குணசேகரன் மருத்துவமனையில் இருக்கார் என்ற கவலை இல்லை, உங்க இரண்டு பேருக்கும் ரொமான்ஸ் கேட்குதா" எனக் கிண்டலாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.  


Advertisement

Advertisement