90’ஸ் காமெடி நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் போன்ற காமெடி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் தான் நடிகை வாசுகி. குறிப்பாக வந்தவர் வேண்டுமென்றால் கவுண்டமணி பிச்சைக்காரர் வேடமணிந்து ஒரு படத்தில் நடித்திருப்பார்.
சில காலம் படவாய்ப்பில்லாததால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பதாகவும் அதற்காக பாஜகவில் இணைந்து விட்டேன். எனக்கும் வயதாகிவிட்டது எனக்கு வேற சொந்த பந்தங்கள் யாரும் இல்லை கூட்டங்கள் நடத்தினால் தான் எனக்கு காசு கிடைக்கும் இல்லையென்றால் கஷ்டப்பட தான் செய்வேன். என பரபரப்பாக பேசி இருந்தார்.
மேலும் முதலமைச்சர் மற்றும் உதயநிதி அவர்களையும் தவறாகப் பேசி இருந்தார். பின்பு அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இது ஒரு புறம் இருக்க நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் சேனலில் பேட்டிளித்திருந்தார். அப்போது அவரிடம் கவுண்டமணி குறித்து கேட்டபோது எல்லாருமே கவுண்டமணி விட்டு வச்சிருக்கமாட்டாரு என்று சொல்லுறாங்க ஆனால் அப்படி ஒன்றும் இல்லையே நான் அவருடன் சின்னத் தாயி, நம்மவூரு பூவாத்தா, ரிக்சா மாமா, இதய வாசல் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அவர் என்னோட தவறாக நடந்ததே இல்லையே எனக் கூறியுள்ளார். தொடர்ந்து படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
Listen News!