• Sep 20 2024

பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 'காவலா'... தமன்னாவின் டான்ஸிற்கு ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'ஜெயிலர்'. அந்தவகையில் 'பேட்ட, தர்பார்' என சூப்பர்ஸ்டார் ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மூன்றாவது முறையாக அவருடன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் கடந்த ஜூன் 6ம் தேதி மாலை ஜெயிலர் படத்தில் இருந்து ‘காவாலா’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. அனிருத் இசையில் ஜானி மாஸ்டர் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸை பக்காவாக ஆடியிருந்தார் தமன்னா. 


இந்நிலையில் அந்த பாடலுக்கு யூடியூபில் 23 மில்லியன் வியூஸ் கிடைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


Advertisement

Advertisement