விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3இன் மூலம் மக்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானவர் கவின். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரின் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து இருக்கின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, அபிராபி, சாக்ஷி எனப் பலருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும். அந்நிகழ்ச்சியின் பின்னர் இவரின் வாழ்க்கையே மாறி விட்டது. அதாவது சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு மாறி விட்டார்.
அந்தவகையில் கவின் தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'டாடா'. கணேஷ் கே பாபு என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து இருக்கிறார்.
அபர்ணா தாஸ் ஏற்கனவே விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தாலும், இவர் தமிழில் ஹீரோயினாக நடித்திருக்கும் முதல் படம் இதுவாகும். இப்படமானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியானது.
எதிர்பார்த்ததை விட பல மடங்கு வசூலை குவித்து வரும் இப்படமானது இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் டாடா திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 14.5 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
எனவே கவின் தன்னுடைய மூன்றாவது படத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளமை இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
Listen News!