• Sep 20 2024

கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்த கவினின் 'டாடா' திரைப்படம்.. முதல் நாளில் மட்டுமே இவ்வளவா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3இன் மூலம் மக்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமானவர் கவின். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரின் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து இருக்கின்றார். 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, அபிராபி, சாக்ஷி எனப் பலருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும். அந்நிகழ்ச்சியின் பின்னர் இவரின் வாழ்க்கையே மாறி விட்டது. அதாவது சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு மாறி விட்டார். 

அந்தவகையில் கவின் தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'டாடா'. கணேஷ் கே பாபு என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து இருக்கிறார். 


அபர்ணா தாஸ் ஏற்கனவே விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்தாலும், இவர் தமிழில் ஹீரோயினாக நடித்திருக்கும் முதல் படம் இதுவாகும். இப்படமானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் வெளியானது.


இப்படத்தினுடைய முதல் ஷோவானது சற்று குறைவான ரசிகர்களுடன் தொடங்கினாலும், அதன்பின் திரையரங்கில் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், டாடா படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தவகையில் முதல் நாள் மட்டுமே இப்படம் ரூ. 1.5 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்திருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.


அதுமட்டுமல்லாது இன்னும் வரும் நாட்களில் கண்டிப்பாக பெரிய தொகையை டாடா திரைப்படம் வசூல் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு கவின் மற்றும் அபர்ணா தாஸ் இருவருக்கும் திரையுலகில் நல்ல அடையாளத்தை கொடுக்கும் படமாக டாடா அமையும் என்றும் கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

Advertisement

Advertisement