• Sep 20 2024

குழந்தைகள் அபோஷன் ஆனதால் வயிற்று வலியால் துடித்த காவியா- குழந்தைகளுக்காக ரெஸ் வாங்கப் போன பார்த்திபன்- இனி நடக்கப் போவது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல். காவியாவைத் திருமணம் செய்திருந்த பார்த்தீபனுக்கு காவியா தனது தம்பி ஜீவாவைத் தான் காதலித்தார் என்ற விஷயம் தெரிந்ததில் இருந்து காவியாவுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டும் நண்பர்கள் மாதிரியே வாழ்ந்து வருகின்றார்.

காவியா கர்ப்பமாக இருப்பதால் காவியாவை கவனமாகப் பார்த்து வருகின்றார்.தன்னுடைய இரட்டைக் குழந்தைகளும் நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார். மறுபுறம் காவியா எக்ஸ்ஷாமுக்கு எப்படியாவது மும்பைக்கு போய் விட வேண்டும் என்பதற்காக பார்த்திபனோடு சண்டை எல்லாம் போட்டிருந்தார்.


இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் காவியாவை மும்பைக்கு கூட்டிட்டு வந்து அவரை பரீட்சைக்கு அனுப்பி வைத்த ஜீவா கடைக்குச் சென்று குழந்தைகளுக்காக ஆடைகள் வாங்கிக் கொண்டிருக்கின்றார். மறுபுறம் பரீட்டை எழுதிக் கொண்டிருக்கும் காவியாவுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட தன்னுடைய நண்பியின் உதவியுடன் ஹாஸ்பிட்டலுக்கு வருகின்றார்.


அங்கே டாக்டர் உங்களுடைய குழந்தை அழிஞ்சு போச்சு இனிமேல் ஒன்றும் பண்ண முடியாது என்று சொல்கின்றார். இதைக் கேட்ட காவியா கீழே விழுந்து அழுகின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement