சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கயல்.இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
மேலும் அப்பாவை இழந்த குடும்பத்தில் ஒரு பெண் தனியாக எப்படி குடும்பத்தை சமாளிக்கின்றாள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இது ஒரு புறம் இருக்க நீண்ட நாள் நண்பனான எழில் கயலை பல வருடங்களாக காதலித்து வருகின்றார்.
இது கயலுக்க தெரிந்தும் முதலில் மறுப்புத் தெரிவித்து வந்த கயல் தற்பொழுது எழில் மீது காதல் கொண்டுள்ளார்.வெகுசீக்கிரத்தில் எழிலிடம் காதலை சொல்லப் போகின்றேன் என்றும் இருந்தார்.
இப்படியான நிலையில் திடீரென எழில் கயல் நடந்துள்ளது. அதுவும் இன்றைய எப்பிஷோட்டில் ஒளிபரப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!