• Sep 21 2024

பிரபல சீரியல் நடிகருடன் கயல் சைத்ரா ரெட்டி…குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். சீரியல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து டி ஆர் பி-ல் முதலிடத்தை தக்க வைத்து வருகின்றது.

இதில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி.இவர் முதல் யாரடி நீ மோகினி எனும் சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர்.

அதில் ஹீரோவாக நடித்தவர் தான் ஸ்ரீ.இவர் தற்பொழுது வானத்தைப்போல சீரியலில் நடித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் சைத்ரா ரெட்டி தற்போது ஸ்ரீ உடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெகு விரைவில் கயல் மற்றும் வானத்தைப்போல சீரியல்களின் மெகா சங்கமம் ஒளிபரப்பாகும் என கூறி வருகின்றனர். இதனால் கயல் சீரியல் ரசிகர்கள் விரைவில் ஒரு கொண்டாட்டத்தை எதிர்பார்க்கலாம்.

Advertisement

Advertisement