• Sep 20 2024

தந்தையிடம் எழில் சொன்ன ரகசியம்... அன்பைக் கடத்திச் சென்ற ரவுடிக் கும்பல்... அதிரடித் திருப்பங்களுடன் 'கயல்' சீரியல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் தற்போது எழிலின் தந்தை எழிலிடம் வந்து "கயல் கழுத்தில் எப்படி தாலி கட்டப் போகிறாய்" எனக் கேட்கின்றார். பதிலுக்கு எழிலும் அவரிடம் ஏதோ ரகசியம் சொல்கிறார்.


மறுபுறம் கயலின் தம்பி அன்புவை காணவில்லை என்று பலரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அன்புக்கு போன் செய்த போதும் போன் எடுக்கவில்லை. இதனையடுத்து வெளியில் பார்த்தால் அவரை ரவுடிகள் சிலர் கடத்தி காரில் ஏற்றி சென்று கொண்டிருக்கின்றனர். 


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement