• Sep 20 2024

பிரபுவின் உடலைக் குழி தோண்டிப் புதைத்த கயல்... குடும்பத்தினருக்கு வந்த சந்தேகம்... பயத்தில் முழிக்கும் ஆனந்தி... வெளியானது Kayal - Special Promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆனந்தியின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கயல் துணிச்சலான முடிவு ஒன்றினை எடுக்கின்றார். அதாவது இறந்த பிரபுவின் உடலை கையாளும் ஆனந்தியும் ஓர் இடத்திற்கு எடுத்துச் சென்று குழி தோண்டிப் புதைக்கின்றனர். 


பின்னர் இருண்டதும் வீட்டிற்கு இவர்கள் இருவரும் பதற்றத்தில் திரும்பி வருகையில் குடும்பத்தினருக்கு இவர்கள் மேல் சந்தேகம் வருகின்றது. அவர்கள் அனைவரும் நீங்க இரண்டு பேரும் ஏன் பதற்றத்தில் இருக்கீங்க..?, என்னாச்சு உண்மையை சொல்லுங்க எனக் கேட்கின்றனர்.


ஆனால் கயலும் ஆனந்தியும் பதில் சொல்லாது பயத்தில் முழிக்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.


Advertisement

Advertisement