• Nov 17 2024

ஐந்து நிமிடத்தில் கயலுக்கு கல்யாணம், கர்ப்பம், குழந்தைகள்: என்னடா உங்க நியாயம்: புலம்பும் ரசிகர்கள்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய தொலைக்காட்சியான சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கயல்.இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

மேலும் அப்பாவை இழந்த குடும்பத்தில் ஒரு பெண் தனியாக எப்படி குடும்பத்தை சமாளிக்கின்றாள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இது ஒரு புறம் இருக்க நீண்ட நாள் நண்பனான எழில் கயலை பல வருடங்களாக காதலித்து வருகின்றார்.

இது கயலுக்கு தெரிந்தும் முதலில் மறுப்புத் தெரிவித்து வந்த கயல் தற்பொழுது எழில் மீது காதல் கொண்டுள்ளார்.வெகுசீக்கிரத்தில் எழிலிடம் காதலை சொல்லப் போகின்றேன் என்றும் இருந்தார்.

இந்த நிலையில்தான் கயல் - எழில் திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


ஆம் இன்று இரவு ஒளிபரப்பான தொடரில் கயல் - எழில் திருமணம் இடம்பெறுவதுபோலவும், கயல் கர்ப்பமாக இருப்பதுபோலவும், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது போன்றவும் பின்னணியில் விஜய்யின் பாடல் ஒலிக்க காட்சிகள் வந்து சென்ற நிலையில் அது எழிலின் கனவென முடிந்தது.


இதனையடுத்து கனவென்றால் போல ஒரு நியாயம் இல்லை யாட என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement