• Sep 20 2024

கார்த்தியின் நான் மகான் அல்ல திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டியா?- கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகில் தமது அழகினாலும் இயல்பான நடிப்பினாலும் ரசிகர்களைக் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. தற்போது மிகவும் பிரபலமான சென்சேஷன் நடிகையாகவும் வலம் வருகின்றார்.

தெலுங்கில் அறிமுகமாகிய முதல் படத்திலேயே பிரபல்யமானதை அடுத்து தமிழிலும் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இவருக்கு கிடைத்து வருகின்றது.

அந்த வகையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தனது 41 வது படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் தற்போது கீர்த்தி ஷீட்டி குறித்த ஒரு மீம் தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

கார்த்தி நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நான் மகான் அல்ல, இப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு சிறுமி வந்துள்ளார்.

அந்த சிறுமி பார்ப்பதற்கு அப்படியே நடிகை கீர்த்தி ஷெட்டி போலவே உள்ளார். ஆனால் அது உண்மையில் அவர் தானா என்பது யாருக்கும் தெரியவில்லை, இதனால் ரசிகர்கள் இப்புகைப்படத்தைப் பார்த்து குழம்பிப் போயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement