• Sep 20 2024

மீண்டும் தேசிய விருதுக்கு தயாரான கீர்த்தி சுரேஷ்- சாணிக்காயிதம் படத்தை பார்த்து பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்பொழுது வெளியாகியுள்ள திரைப்படம் தான் சாணிக்காயிதம். இப்படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அமேசான் பிரைமில் வெளியாகிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. அதிலும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கெட்ட வார்த்தைகளை பேசியும், கொடூரமாக கொலைகள் செய்தும் நடித்துள்ள ராவான நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இவர் நடிப்பில் வெளியாகிய பெண்குயின், மிஸ் இந்தியா, ரங் தே, அண்ணாத்த, மரைக்காயர், குட் லக் சகி போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்ததால் இந்தப் படத்திற்காக எதிர்பார்ப்பானது குறைவாகவே காணப்பட்டது.

ஆனால், முதுகில் அருவா சொருகிக் கொண்டு அந்த இடத்திலேயே ஆசிட் ஊற்றும் நடிப்பை பார்த்து பலரும் மிரண்டு போய் கீர்த்தி சுரேஷை பாராட்டி வருவதோடு கீர்த்தி சுரேஷின் அசுரத் தனமான நடிப்புக்கு சாணிக் காயிதம் படம் ஒரு மிகப்பெரிய சான்று என கூறி வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் இவங்க ரெண்டு பேரோட ஆக்டிங் மரண மாஸ் என ரசிகர் பாராட்டித் தள்ளி உள்ளார். அத்தோடு இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்காக தேசிய விருது வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அத்தோடு இவர் நடிகையர் திலகம் திரைப்படத்திற்காக ஏற்கனவே தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/7NphYEr517E

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement