• Sep 20 2024

இப்படி பார்க்காதீங்க கீர்த்தி சுரேஷ் எங்களுக்கு வெக்கமா இருக்கு- கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரியதர்ஷன் இயக்கத்தில் கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த 2013-ல் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் இவருக்கு இந்த முதல் படம் சிறந்த அடித்தளமாக அமைந்தது.

தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் சிறந்த நடிப்பினால் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் முதலான நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம்வருகின்றார்.

தற்போது நடிகைகள் பொதுவாக தனி பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை கீர்த்தியும் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். சமீபத்தில்,நடிகை கீர்த்தி சர்காரு வாரி பாட்டா படத்தில் மகேஷ் பாபாவுக்கு ஜோடியாகவும், சாணிக்காகிதம் படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி அடிக்கடி போட்டோ ஷூட் செய்து தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார். அந்தவகையில் நடிகை கீர்த்தி வெள்ளை சல்வார் அணிந்து ஃபுல் மேக்கப்புடன் போட்டோ ஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் தெறிக்க விட்டு வருகின்றார். இந்த போட்டோவை பார்த்த கீர்த்தியின் ரசிகர்கள் வாவ்…கீர்த்தி செம கியூட்டா இருக்கிறீங்க என்று தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement