• Sep 20 2024

அந்த நடிகருடன் DASARA படத்தின் FDFS பார்க்க ஆர்வமாய் வந்த கீர்த்தி சுரேஷ்..கசிந்த புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'.ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிப்பில் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.


சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அத்தோடு நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.


மேலும் இப்படத்தில் நானி & கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தரணி எனும் கதாபாத்திரத்தில் நானி நடித்துள்ளார்.

தசரா திரைப்படம், இன்று 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி உள்ளது.அத்தோடு காலை முதல் ரசிகர்கள் படம் பார்க்க திரையரங்குகளில் திரண்டு உள்ளனர்.


அத்தோடு இந்த படத்தின் கதாநாயகன் நானி & கதாநாயகி கீர்த்தி சுரேஷ் இருவரும் ஐத்ராபாத் நகரில் உள்ள சுதர்சன் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்தனர்.

Advertisement

Advertisement