• Sep 21 2024

புல்லட் வண்டியை அசால்ட்டாக ஓட்டிய கீர்த்தி சுரேஷ் - தீயாய் வைரலாகி வரும் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.


இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. உலக அளவில் சுமார் 800 திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம் முதல் நாளில் ஏழு கோடி வசூல் செய்த நிலையில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 40 கோடி வரை வசூலை குவித்துள்ளது.



மாமன்னன் திரைப்படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மாமன்னர் திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. 


இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாமன்னன் திரைப்பட ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அட்ராசிட்டிகளை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement