• Sep 20 2024

பாலிவூட் நாயகனுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் - மும்பை விமானநிலையத்தில் செம மாஸாக சென்ற வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர் கீர்த்தி சுரேஷ். ஆரம்பத்தில் இவர் ஹீரோயினாக நடித்த படங்கள், வெற்றிபெற தவறினாலும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்', 'ரெமோ' போன்ற படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்ததால், விஜய், தனுஷ், போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடிபோடும் வாய்ப்பை கைப்பற்றினார்.

தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தமிழில் இறுதியாக உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரின் கைவசம் தமிழில் மட்டும் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, மற்றும் கண்ணிவெடி ஆகிய படங்கள் உள்ளன. 


தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக'வேதாளம்' படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். விரைவில் பாலிவுட் திரையுலகிலும் சைலண்டாக கால் பாதிக்க உள்ளாராம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாராவை தொடர்ந்து கீர்த்தி, பாலிவுட் திரையுலகில் என்ட்ரி ஆகியுள்ளது ரசிகர்களை அதிர செய்துள்ளது.

இப்படியான நிலையில் ஷுட்டிங்கிற்காக செம ஸ்டைலாக கீர்த்தி சுரேஷ் மும்மை விமான நிலையத்திற்குச் சென்ற வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement