• Nov 10 2024

ப்ரியங்கா மோகனுடன் சேர்ந்து தோசை சாப்பிடும் சேலஞ்சில் ஈடுபட்ட கீர்த்தி சுரேஷ்- வைரலாகும் போட்டோஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த தசரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஸ்ரீகாந்த் ஒடேலா என்கிற புதுமுக இயக்குநர் இயக்கிய இப்படம் பான் இந்தியா அளவில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியால் செம்ம குஷியில் உள்ளாராம்.


நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில் சைரன், மாமன்னன், ரகுதாதா, ரிவால்வர் ரீட்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சைரன் படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இப்படி பிஸியான இருக்கும் நிலையில் நடிகை ப்ரியங்கா மோகனுடன் இணைந்து தோசை சாப்பிடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்தப்புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. மேலும் ப்ரியங்கா மோகன் டாக்டர் டான் போன்ற படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement