தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்து வருகின்றார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது மாமன்னன் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது கீர்த்தி சுரேஷ் அரசியலில் நுழைய உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
அந்தவகையில் அவர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவரும் திமுக-வில் இணைந்து விரைவில் தன்னுடைய அரசியல் பணியை தொடங்குவார் என்று கூறப்படுகின்றது. மேலும் கீர்த்தி சுரேஷுடன் மாமன்னன் படத்தில் நடித்துள்ள அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்ததன் பெயரில் தான் கீர்த்தி சுரேஷ் அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏற்கெனவே விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதனையடுத்து தற்போது கீர்த்தி சுரேஷும் இணைகின்றார் என்ற தகவல் ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
Listen News!