• Nov 14 2024

கூலிங் கிளாஸ் அணிந்து மாஸ் லுக் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்... லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளிலும் கொடி கட்டிப் பறந்து வருகின்றார்.


குறிப்பாக 2000களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் 2013 இல் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.

எனினும் தமிழில் இவருக்கான அறிமுகத்தை கொடுத்தது விக்ரம் பிரபு நடிப்பில் உருவான 'இது என்ன மாயம்' என்ற திரைப்படம் தான்.


மேலும் சிறந்த கதாப்பாத்திரம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான இவர் சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்ற கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றார்.


அந்த வகையில் தற்போதும் கூலிங் கிளாஸ் அணிந்து க்யூட்டான போஸ் கொடுத்திருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருவதோடு, தமது கமெண்டுகளையும் பதிவு செய்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement