• Nov 17 2024

உடல் எடையைக் குறைத்த கீர்த்தி சுரேஷ்…எதற்காக இப்படி..?புடவையில் வெளியான புகைப்படங்கள்…!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் டாப் நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஸ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றார். 2000 களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2013-ஆம் ஆண்டில் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாகத் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் தமிழ் சினிமாவில் இவருக்கான அறிமுகத்தை கொடுத்தது விக்ரம் பிரபு நடித்த 'இது என்ன மாயம்' என்னும் திரைப்படமே. இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் 'பைலட்ஸ், அச்சனே எனக்கு இஷ்டம், இது என்ன மாயம், ரஜினி முருகன், தானா சேர்ந்த கூட்டம்' போன்ற பல படங்களும் வெளியாகி இருக்கின்றன. இது தவிர இன்னும் பல படங்களில் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகிய 'பைரவா' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்ற ஒரு படமாகும். இவற்றை தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு படங்களிலேயே அதிகளவு கவனம் செலுத்தி வருகின்றார்.

இவ்வாறாக தனது தனித்துவமான நடிப்பினாலும், அழகினாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்த நடிகை கீர்த்தி சுரேஸ் பல விருதுகளையும் வென்றெடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது போன்ற விருதுகளைக் குறிப்பிடலாம்.

இவ்வாறாக நடிப்பில் சிறந்து விளங்குகின்ற இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர். அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார். அப்புகைப்படங்களிற்கு அவரது ரசிகர்கள் தமது லைக்ஸ்களையும், கமெண்டுகளையும் தெறிக்க விட்டு வருவார்கள்.

அந்த வகையில் இவர் தற்போதும் பிங் நிற பட்டு சேலை ஒன்றினை அணிந்து எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கின்றார். அப்புகைப்படத்தில் இவர் முன்னரை விட சிலிம்மாக உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "படத்திற்காக கீர்த்தி தன்னுடைய உடல் எடையை குறைத்து விட்டார் போல" எனக் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement