தமிழ் சினிமாத் திரையுலகில் 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனைத் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தைத் தற்போது பெற்றிருக்கின்றார்.
இருப்பினும் சமீபகாலமாக சினிமாவில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காமையினால், கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்து வந்திருந்தன. இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.
அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடிகர் விஜய் - கீர்த்தி சுரேஷ் பற்றிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி அதிர்ச்சியை கொடுத்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்திரிக்கையாளர் பிஸ்மியும் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது கீர்த்தி சுரேஷின் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் தன்னிடம் கீர்த்தி சுரேஷின் காதல் பற்றி கூறியிருந்தார்.
அதாவது பள்ளிப்பருவ காலத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ், ஒருவரை 13 வருடமாக காதலித்து வருவதாகவும் அவருடன் திருமணம் செய்ய இரு வீட்டாலும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். மேலும் பல இடங்களில் ரிசார்ட் வைத்திருக்கும் நபர் தான் கீர்த்தி சுரேஷின் காதலராம்.
இந்நிலையில் திருமணத்திற்கு தயாராக கீர்த்தி சுரேஷ் 4 வருடங்கள் டைம் கேட்டிருப்பதால் வேறு படங்களில் கமிட்டாகாமல், இருக்கும் படத்தினை முடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்திலும் விளம்பரம் குறித்த வீடியோக்களை மட்டுமே அதிகம் பகிர்ந்து வருகின்றார்.
இவ்வாறாக நடிக்காமல் விளம்பர படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதை நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகிறார்கள்.
Listen News!