• Sep 20 2024

வார விடுமுறையை சூப்பராக கொண்டாடிய கீர்த்தி... அதுவும் யார் கூட தெரியுமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவரே நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்டோருடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் மிக குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர். 

இவ்வாறாக தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிஸியாக இருக்கும் இவர் சமீபத்தில் 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் தோன்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து நானியின் நடிப்பில் வரவிருக்கும் ஆக்‌ஷன் என்டர்டெய்னரான தசராவிலும் பணிபுரிந்து வருகிறார். இதற்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமல்லாது தமிழில் கீர்த்தி சுரேஷ் 'மாமன்னன்' என்ற படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.  அரசியல் த்ரில்லர் படமான இதில் உதயநிதி நாயகனாக  நடிக்கிறார். மேலும் சஸ்பென்ஸ் நாடகமாக அமைந்திருக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன்  இணைந்து ஃபஹத் பாசில் மற்றும் வடிவேல் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. 

இதற்கிடையே 'மகாநதி' சாவித்ரியாக நடித்தமைக்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தனக்காக திரைக்கதையை தானே தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் 'குட் லக் சகி' என்ற படத்திலும் தோன்றி பல பாராட்டுக்களை பெற்று இருந்தார்.   


முன்னணி நாயகியாக உயர்ந்த பின்னர் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார். அந்தவகையில் தற்போதும் தனது செல்லப்பிராணியான நாய்க்குட்டியுடன் இணைந்து வார விடுமுறையை கொண்டாடி இருக்கின்றார். அதனைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருக்கின்றார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement