• Nov 10 2024

கேரளா ஸ்டோரிஸ் திரைப்படம் ஒரு விஷ விதை- மோசமாக விமர்சித்த பருத்தி வீரன் திரைப்பட இயக்குநர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் சில நேரங்களில் சமூக கருத்து சொல்கிறேன் என சில இயக்குநர்கள் இயக்கும் திரைப்படங்கள், பொது மக்கள் மத்தியில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகிவிடும். வருடத்திற்கு ஒரு படமாவது இப்படி வருவது உண்டு.

அந்த வகையில் இந்த வருடம் பாலிவுட்டில் எடுக்கப்பட்டு இந்தியா முழுவதும் வெளியான கேரளா ஸ்டோரிஸ் என்கிற திரைப்படம் பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த திரைப்படம் மத ரீதியாக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த படம் வெளியாவதற்கு முன்பே இதை தடை செய்ய சொல்லி வழக்கு நடந்தது. 


ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு போலீஸ் பாதுக்காப்போடு பல பகுதிகளில் இந்த படம் வெளியானது. இதற்கு முன்பு இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு ஒரு படம் வெளியாகி இருக்குமா? என தெரியவில்லை.

இந்த நிலையில் இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் அமீர், இந்த திரைப்படம் ஒரு விஷ விதை. இஸ்லாமிய வெறுப்பை மக்கள் மத்தியில் திணிப்பதற்காகவே இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த இயக்குநருக்கு பின்னால் ஒரு அமைப்பு இருந்துக்கொண்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளது.


இதுவே நான் குஜராத்தில் நடந்த மத கலவரத்தை பின்புலமாக வைத்து படம் எடுத்தால் அது சென்சார் போர்டையே தாண்டாது என பேசியிருந்தார் அமீர். மேலும் அவர் கூறும்போது, பிரதமரே இந்த படத்தை மேற்கோள் காட்டி பேசுகிறார். இந்தியாவில் எவ்வளவோ உளவு அமைப்புகள் உள்ளன. அதில் தீவிரவாதம் குறித்த தரவுகள் இருக்கும்.

அதை வைத்து எல்லாம் தீவிரவாதம் பற்றி பேசாமல் ஒரு ஆதாரமற்ற படத்தை வைத்து பேசலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement