ஹிந்தி பிக்பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகையுமான சோனாலி போகத் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் பார்ட்டி ஒன்றில் தனது நண்பர்களுடன் கலந்துக் கொண்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு மாரடைப்பு தான் காரணம் என்று கூறப்பட்டது.
ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் சாவதற்கு முன்னதாக, தன்னுடைய அம்மாவில் போன் செய்த சோனாலி, தன்னுடைய உணவில் எதுவோ கலக்கப்பட்டுள்ளதாகவும் சாப்பிட்ட பின்பு தன்னுடைய உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்ததாகவும் சோனாலி சகோதரி போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, சோனாலியின் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் போதைப் பொருள் விற்பனையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக சோனாலியின் ஹரியானா பண்ணை வீட்டில் இருந்த லேப்டாப், சிசிடிவி கேமரா உட்பட முக்கியப் பொருள்கள் காணாமல் போயிருக்கின்றன. இதுகுறித்து போலீசாரிடம் சோனாலியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சோனாலி போகத் மர்ம சாவிற்கு காரணமானவர்கள் யார் என்பது இன்னும் விசாரணை கட்டத்திலேயே உள்ளது. இந்த வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வுகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கு விசாரினையை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் என்று கோவா முதல்வர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!