பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் KGF-2. இப்படம் கன்னடத்தில் தயராகி இருந்தாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியானது.
மேலும் இந்த படம் பாலிவுட் சினிமா படங்களின் சாதனையை முறியடித்து அதிக வசூலித்த படங்களில் லிஸ்டில் 2வது இடம் பிடித்திருந்தது.
தமிழகத்திலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, சென்னையில் ரூ. 10 கோடியை எட்டியுள்ளது என கூறப்படுகின்றது.
எல்லா மொழிகளிலும் செம ஹிட் கொடுத்துள்ள இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம். இதன் முதல் பாகத்தை அமேசன் பிரைம் தான் வாங்கியிருந்தார்கள்.
எனவே இதன் 2ம் பாகம் அவர்களே வாக்குவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் KGF-2 படத்தை கைப்பற்ற ஜீ நெட்வொர்க் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.. அவர்கள் 320 கோடி வரை விலை கொடுத்து KGF-2 படத்தை வாங்க முயற்சிக்கிறார்களாம்.
ஆனால் யார் படத்தை வாங்குகிறார்கள், எப்போது ரிலீஸ் என்பது எல்லாம் சரியாக தெரியவில்லை.
பிறசெய்திகள்:
- கடும் வெயிலில் ஓட வைத்த இயக்குநர் பாலா-கோபத்தில் வீட்டுக்குக் கிளம்பிய சூர்யா
- நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு உதவும் சிவகார்த்திகேயன் -ஏன் தெரியுமா..?அவரே கூறிய தகவல்..!
- தளபதி 66 இல் விஜய்யுடன் இணைந்த முன்னணி நட்சத்திரங்கள்.. முழு லிஸ்ட்
- மாடர்ன் உடையில் ரசிகர்களை கவர்ந்த தமன்னா-லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- சக்தி சொன்ன வார்த்தைகளால் உச்ச கட்ட பதற்றத்தில் பாரதி- ஆறுதல் சொன்ன சௌந்தர்யா
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!