• Sep 20 2024

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம்- அதுவும் எப்போது தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு,பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கேஜிஎஃப் 2, 2022 ம் ஆண்டின் மிகப் பெரிய வசுல் சாதனை படைத்த படமாக மாறியது.

கேஜிஎப் படத்தில் தனது தாயின் ஆசையை நிறைவேற்ற, நிறைய பணம் சம்பாதிக்க முடிவு செய்யும் சிறுவன், மிகப் பெரிய டானாக உருவெடுக்கிறான். ராக்கி பாய் எப்படி கேஜிஎஃப் ஐ ஆட்சி செய்யும் கருடனை கொலை செய்து, கேஜிஎஃப் ஐ கைப்பற்றுகிறான் என்பது தான் முதல் பாகத்தின் கதை.

இரண்டாம் பாகத்தில் கேஜிஎஃப் ஐ மிகப் பெரிய சாம்ராஜ்யமாக்கி, மக்கள் ஆதரவுடன் எப்படி இந்தியாவிற்கே டானாக வளர்க்கிறான் என காட்டி உள்ளனர்.கேஜிஎஃப் 2 படம் இதுவரை உலகம் முழுவதும் 1198 கோடிகளை வசுல் செய்துள்ளது. இந்த படம் ஓடிடி.,யிலும் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விரைவில் கேஜிஎஃப் 3 படத்தை இயக்க உள்ளதாக டைரக்டர் பிரசாந்த் நீல் அறிவித்துள்ளார். அதற்கு முன் மற்றொரு படத்தை இயக்கி விட்டு, கேஜிஎஃப் 3 வேலைகளை துவக்க உள்ளதாகவும் அதற்கு அதிக அவகாசம் தேவைப்படுவதாக பிரசாந்த் நீல் தெரிவித்தார்.

இந்த நிலையில் கேஜிஎஃப் 2 படம் விரைவில் ஜீ தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பப்பட உள்ளதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில் இந்த படம் ஒளிபரப்பப்பட உள்ளது என அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement