kgf நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி தனது புதிய ஆரம்பம் என குறிப்பிட்டு டுவிட்டரில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி kgf திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் மேலும் பிரபலமானார். அந்த திரைப்படத்தின் பின்னரே ஏராளமான ரசிகர்கள் உருவாக்கினார். தற்போது "தெலுசு கட" என்ற நீரஜா கோனா இயக்கிய தெலுங்கு காதல் பொழுதுபோக்குத் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா, ராஷி கண்ணா, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ள இதற்கு யுவராஜ் ஜே ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படத்தை பீப்பிள் மீடியா பேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் நேற்று அக்டோபர் 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பூஜையில் படக்குழுவினர் மற்றும் தெலுங்கு நடிகர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவிட்ட ஸ்ரீனிதி ஷெட்டி அழகான புதிய தொடக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
Listen News!