கன்னட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்தியத்திரைப்படமாக வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் கே.ஜி.எப் . இப்படத்தின் 2ம் பாகத்தில் பிரதமர் ரோலில் நடித்து மிரட்டி இருப்பவர் ரவீனா டாண்டன். அந்த படம் இந்தியா முழுவதும் சூப்பர்ஹிட் ஆகி வசூலை குவித்த நிலையில் ரவீனாவின் நடிப்புக்கும் பாராட்டு குவிந்தது.
இந்நிலையில் தற்போது ரவீனா டாண்டனின் மகள் ரஷா புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் 18ம் பிறந்தநாளை கொண்டாடிய அவர் விரைவில் சினிமாவில் நுழைவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
ரவீனா இன்று மகளுடன் ஏர்போர்ட் வந்தபோது அவருடன் செல்பி எடுக்க அதிகம் பேர் வந்திருக்கின்றனர்.அப்போது ஒரு நபர் ரவீனா மகள் ரஷாவை தள்ளி இருக்கிறார். அதை பார்த்த ரவீனா அந்த நபரை எச்சரித்து இருக்கிறார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Listen News!