பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நேற்று திடீரென மாரடைப்பால் காலமான நிலையில் ‘கேஜிஎப்’ படத்தின் நடிகர் யாஷ் அவர் கேட்காமலே ஒரு பெரிய தொகையை கொடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, உள்பட திரைப்படங்களில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி நேற்று திடீரென மாரடைப்பால் காலமானது ஒட்டுமொத்த திரையுலகினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் டேனியல் குறித்த பல தகவல்கள் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் சிறு வயதில் இருந்து ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டிருந்த டேனியல் பாலாஜி தனது அம்மாவின் ஆசைக்காக அங்காள பரமேஸ்வரி கோயிலை கட்டியுள்ளார். இந்த கோயிலை கட்டும் போது அவர் தனக்கு தெரிந்த பல திரை உலக பிரபலங்களிடம் நிதி உதவி கேட்டதாகவும் அவர் கேட்ட உடனே பலர் அந்த கோவிலுக்காக பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தான் கேஜிஎப் படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது கேஜிஎப் நாயகன் யாஷ் இடம் தான் கோயில் கட்டிக் கொண்டிருப்பதாகவும் அனைவரிடமும் நிதி வசூல் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். அதை கேட்டு யாஷ் அப்போது ஒன்றும் சொல்லாத நிலையில் திடீரென மறுநாள் அவருடைய வங்கி அக்கவுண்டுக்கு ஒரு மிகப்பெரிய தொகை வந்ததை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் யாஷ் இடம் போன் செய்து ’கேஜிஎப்’ படத்தில் நடிப்பதற்கு இன்னும் நான் டேட் கொடுக்கவே இல்லையே அதற்குள் சம்பளம் கொடுத்து விட்டீர்களே என்று கேட்க அதற்கு யாஷ் இது சம்பளம் அல்ல, நீங்கள் கட்டப்போகும் கோயிலுக்கு என்னுடைய நன்கொடை என்று கூறியதை கேட்டு அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் கேஜிஎப் படத்தில் டேனியல் பாலாஜியால் நடிக்க முடியவில்லை என்பது துரதிஷ்டவசமானது.
கோவிலுக்கு நன்கொடை தாருங்கள் என்று வாய்விட்டு டேனியல் பாலாஜி கேட்காத நிலையில் யாஷ் புரிந்து கொண்டு அந்த கோவிலுக்கு அவர் நன்கொடை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு கிராதகா என்ற கன்னட படத்தில் நடிக்கும் போது யாஷ் மற்றும் டேனியல் பாலாஜி நெருக்கமாக நண்பர்களாக இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!