• Sep 21 2024

ரெடியா... மாஸ் காட்ட வரும் ரஜினியின் அடுத்த பாடல்... எத்தனை மணிக்குத் தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து  எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருந்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிரூத் தான் இசையமைக்கிறார்.ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.


இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. அந்தவகையில் படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் ஜெயிலர் குறித்த அப்டேட்களும், போஸ்டர்ஸ், கிலிம்ப்ஸ் வீடியோக்களும் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

அந்தவகையில் சமீபத்தில் வெளியான காவாலா பாடல் மாஸ் காட்டி ஹிட்டடித்தது. இந்த நிலையில், இன்று மாலை செகண்ட் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. அதாவது 'ஹூக்கும்' என பெயரிட்ட இந்த பாடலுக்கான ப்ரோமோவை நேற்று முன் தினம் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். 47 நொடிகள் மட்டுமே இருந்த ப்ரோமோவில் ரஜினியின் மாஸ் டயலாக் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து இப்பாடலிற்காக ரஜினி ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement