பிரபல பாலிவுட் பிரபலங்கான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியரா அத்வானி இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி முன்பு இருந்தே பரவி வருகிறது. ஆனால், இவர்கள் இருவரும் என்னதான், எங்கள் இருவருக்கும் திருமணம் இல்லை என்று மறுத்து வந்தாலும், இப்பொது இவர்கள் இருவரும் திருமணம் செய்யப்போவது உறுதியாகியு இருந்தது.
அந்தவகையில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி இருவருக்கும் நேற்று ராஜஸ்தானில் வைத்து கோலாகலமாக திருமணம் நடைபெற்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இந்த திருமணத்தில் நெருங்கிய உறவுகள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமணத்திற்கு நடிகை சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் , நடிகை கியாரா அத்வானி தமிழில் வெளியான ‘தோனி’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,கியாரா அத்வானி மற்றும் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.
Listen News!