தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்பொழுது திருச்சிற்றம்பலம் ,வாத்திஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம்.
இப்படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் லீட் ரோலில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் பாரதிராஜா, பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிரூத் இந்த படத்தில் இணைந்துள்ளதால், இப்படத்தின் இசை வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
அத்தோடு ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் கதாநாயகனின் கல்லூரி நாட்கள் மற்றும் அவனது இளமைப் பருவம் என இரண்டு கட்டங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
தனுஷின் கதாபாத்திரத்தில் இரண்டு காதல்கள் உள்ளன, ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும் வருகின்ற மாதிரி கதையை வடிவைத்திருக்கிறார் இயக்குநர்.
இந்நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பாரதிராஜா, தனுஷூக்கு போன் செய்து இன்று பாதர்ஸ் டே உன் அப்பாவுக்கு விஷ் பண்ணியானு கேட்டு அலப்பறை செய்கிறார். அந்த glimpse வீடியோ தனுஷ் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ‘தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் மட்டுமே இது சாத்தியமாகும்’-புகழ்ந்து பேசிய இயக்குநர் செல்வராகவன்
- நடிகை காஜல் அகர்வாலின் அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் புகைப்படம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!