• Sep 20 2024

டெல்லியைத் தொடர்ந்து சோழர்களின் அடுத்த பயணம் எங்கு தெரியுமா..? முக்கிய இடத்திற்கு படையெடுக்கும் PS-2 டீம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. 


இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். 


மேலும் இப்படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே இருப்பதனால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர். 


அந்தவரிசையில் நேற்று டெல்லிக்கு சென்றனர். இதனையடுத்து இன்று கொச்சின் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement