• Nov 19 2024

இந்தி தான் தெரியும் ..தமிழில் எழுத தெரியாது..பிக்பாஸில் எழுந்த சர்ச்சை-கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 கடந்த வாரம் இது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இங்கே மலையாளத்தில் பேசக் கூடாதென ஷெரினாவுக்கு மலையாள எவிக்‌ஷன் கார்டு காட்டி வெளியேற்றிய கமல்ஹாசன் இந்த வாரம் நடக்கும் கூத்துகளை பார்த்து என்ன பண்ண போகிறார் என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். 

இந்த வாரம் கேப்டனாக மாறியுள்ள மைனா நந்தினி மைக்கை மாட்டாத ஷிவினை எல்லம தோப்புக் கரணம் போட சொன்னது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.அதே போல, போட்டியாளர்கள் யாராவது எதையாவது எழுதிக் காட்டினால் தமிழில் தான் எழுதி காட்ட வேண்டும் என்கிற நல்ல முன்னெடுப்பை எடுக்க ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு தமிழில் எழுதவே தெரியாது என கூறும்  அவலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக பாதித்துள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் தமிழில் போட்டியாளர்கள் அதிகம் பேசாமல் ஆங்கிலத்திலேயே பேசி வருவது வழக்கம் தான். இந்த சீசனில் ஆயிஷா மற்றும் ஷெரினா அதிகமாக மலையாளத்தில் பேசி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் அதனை வன்மையாக கண்டித்து ஷெரினாவுக்கு மலையாள எவிக்‌ஷன் கார்டை காட்டி வெளியே அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய மொழியான மலையாளத்துக்கு அனுமதி இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் பிக் பாஸ் வீட்டில் பலரும் மணிக்கணக்கா பேசலாம். பிக் பாஸ் என நிகழ்ச்சியின் பெயரே ஆங்கிலத்தில் இருக்கலாம். அதற்கெல்லாம் எந்தவொரு தடையுமில்லையா கமல் சார் என ஏகப்பட்ட விவாதங்களும் விமர்சனங்களும் சமூகவலைத்தளத்தில் எழுந்து வருகின்றது.

இவ்வாறுஇருக்கையில், இன்னொரு பிரச்சனை கிளப்பி விட்டு இருக்கிறார் மைனா நந்தினி. பிக் பாஸ் வீட்டில் தமிழில் தான் எழுதி காட்ட வேண்டுமென இந்த வார தலைவியான மைனா நந்தினி வைத்த அருமையான முன்னெடுப்பிற்கு எந்தவொரு சக போட்டியாளரும் சம்மதம் தெரிவிக்காமல் கிண்டலாக பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அய்யய்யோ தமிழில் எழுத தெரியாதென பிக் பாஸ் ஹவுஸ்மேட்கள் அலறியடித்து ஓட, சிலர், எங்களுக்கு இந்தியில் தான் எழுத தெரியும் தமிழில் எழுத தெரியாது என ஓப்பனாகவே பேசியிருப்பது. உண்மையாகவே இது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தானா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்குள் தேவையில்லாமல் மொழி அரசியலை கொண்டு வரக் கூடாது. மேலும் அப்படி மொழி அரசியலை முன்னிறுத்தினால் தேவையில்லாத சர்ச்சைகளும், விமர்சனங்களும் சமூகவெளியில் இருந்து எழத்தான் செய்யும். தமிழ் தெரியாதென வெளிப்படையாக சொல்லும் போட்டியாளர்களை எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் தேர்வு செய்யுறீங்க என ரசிகர்கள் விளாசி வருகின்றனர். மலையாள பிரச்சனையை கையில் எடுத்த கமல் இந்த வாரம் இதையும் கேட்பாரா? என்றும் கேள்விகள் பறக்கின்றன

Advertisement

Advertisement