விஜய் டிவியில் வடிவேல் பாலாஜியின் டீமில் இடம் பெற்று ரசிகர்களை மகிழ்வித்து வந்த புகழ். குக் வித் கோமாளி மூலம் மிகப் பிரபலமாகிவிட்டார். இவருக்கு தனியாக பேன்ஸ் பேஸே உருவாகிவிட்டது. அந்த நிகழ்ச்சி மூலம் அதிக ரசிகர் பட்டாளத்தை வென்ற புகழ் தற்போது படங்களிலும் நடித்த வருகிறார்.
சமீபத்தில் தான் தனது காதலியை பல மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது குக்வித்கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகின்றார். இது தவிர இன்று வெளியாகியுள்ள "1947" திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார்.
இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு கூறியதாவது இன்று வெளியாகியுள்ள "1947" திரைப்படத்தில் தவிடன் எனும் கதாபாத்திரத்தை ஏற்றுருக்கிறேன்...இது உங்கள் அனைவரது மனதையும் நிச்சயம் கவரும்.
இந்த கதாபாத்திரத்தை எனக்கு அளித்த இயக்குநர் @ponkumar_ns மற்றும் @a.r.murugadoss sir க்கு நன்றி... @gauthamramkarthik எனும் நல்ல நண்பன் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி... என்றும் என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
Listen News!