• Sep 21 2024

ஒரே படத்தில நம்மள கிராஸ் பண்ணி போயிட்டானே.. சூரியை பார்த்து புகைச்சலுடன் ஹீரோக்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் சூரி 'விடுதலைஎன்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடித்து நம்மையெல்லாம் கிராஸ் பண்ணி சென்று விட்டார் என்று வளர்ந்து வரும் ஹீரோக்கள் புகைச்சலுடன் இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டிருந்த சூரி திடீரென வெற்றிமாறன் இயக்கத்தில் உருவானவிடுதலைஎன்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் என்பதும் அந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும் சூரி கேரக்டர் தான் சிறப்பாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில்விடுதலை 2’ ‘கருடன்’ ’கொட்டுக்காளிஉள்பட சில படங்களில் நடிகர் சூரி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது மார்க்கெட்டும் உயர்ந்துள்ளதாகவும், சம்பளமும் உச்சத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.



காமெடி நடிகராக இருந்தபோது தினமும் ஆயிரக்கணக்கில் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சூரி, தற்போது ஒரு திரைப்படத்திற்கு 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்து வரும் ஹீரோக்கள் பொறாமைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நடிகர்கள் கோலிவுட்டில் அதிகம் இருக்கும் நிலையில் காமெடி நடிகராக இருந்து திடீரென ஹீரோவாகி, தற்போது உச்சத்தை நோக்கி சென்று கொடுக்கும் சூரிக்கு திரை உலகில் எதிரிகள் அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சூரி அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது இனி அடுத்தடுத்து அவர் ஹீரோவாக மாறி மட்டும் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement