தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டீவி. இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைக் கடந்து அதில் பங்கேற்கும் கலைஞர்கள் மற்றும் தொகுப்பாளர்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
அதுமட்டுமன்றி 'ஸ்டார்' என்ற அந்தஸ்தில் இருக்கும் அவர்களின் நிகழ்ச்சிகளை அவர்களுக்காகவே பார்க்கும் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது.
இவ்வாறான விஜய் தொலைக்காட்சியின் பிரபல முகமாக மாறியிருப்பவர் தொகுப்பாளினி பிரியங்கா. இவர் 'சூப்பர் சிங்கர்' மற்றும் 'கலக்கப்போவது யாரு' உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கின்றார்.
அதுமட்டுமன்றி காமெடி, கலாட்டா மற்றும் அலப்பறைகளை செய்து தனக்கென தனியான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
இவர் தொலைக்காட்சியைக் கடந்து யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். சத்தமான சிரிப்புடன் கிண்டல் கேலிகளை செய்யும் இவர் மற்றவர்கள் தன்னை கிண்டல் செய்வதையும் ஜாலியாக எடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
இவ்வாறாக எப்போதுமே ஜாலியாக இருக்கிற இவரின் தம்பிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தமை யாவருக்கும் தெரிந்த ஒரு விடயமே. இதனை பிரியங்கா தனது சமூக வலைத்தளங்களின் மூலமாக புகைப்படங்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் இவர் தற்போதும் தன்னுடைய மருமகளுடன் கொஞ்சிக் குலாவி, அவரைத் தாலாட்டும் வீடியோ ஒன்றினையும் தனது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக பகிர்ந்திருக்கின்றார். அதை பார்த்த ரசிகர்கள் "குழந்தை அச்சு அசல் அத்தையை போலவே இருப்பதாக கூறி வருகின்றனர்.
Listen News!