சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர். வெட்டுக்கிளி என அழைக்கப்படும் இவரின் காமெடியை அடிச்சுக்க சின்னத்திரையில் ஆளே இல்லை எனக் கூறலாம்.
சின்னத்திரையில் மட்டுமன்றி சமீபகாலமாக பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இது தவிர சமூகப் பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். அந்தவகையில் ஆதரவற்ற பல பல குழந்தைகளுக்கு உதவுவது மட்டுமல்லாது ஆம்புலன்ஸையும் அன்பளிப்பு செய்து வருகின்றார்.
அந்தவகையில் அறந்தாங்கி அருகே முதியோர் இல்லம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார். அதன் பின்னர் மலை கிராமம் ஒன்றிற்கும் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருந்தார். இதனையடுத்து சமீபத்தில் சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கும் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்திருந்தார்.
இவ்வாறாக தான் கொடுத்த 3ஆம்புலன்ஸுடனும் நின்று புகைப்படம் எடுத்த பாலா அதனை தனது 3பிள்ளைகள் எனக்குறிப்பிட்டு இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இவரின் சமூக சேவையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Listen News!