'புரியாத புதிர்' என்னும் திரைப்படத்தின் மூலம் 1990 ஆண்டு இயக்குநராக அறிமுகமாகியவர் தான் கே.எஸ்.ரவிக்குமார்.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'சேரன் பாண்டியன்', 'புத்தம் புது பயணம்', 'ஊர் மரியாதை', 'பொண்டாட்டி ராஜ்ஜியம்', 'சூரியன் சந்திரன்' போன்ற படங்களை இயக்கினார்
இது தவிர இன்னும் பல திரைப்படங்களை இயக்கிய இவரது அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் எனலாம். அதிலும் இவர் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்பம் இன்றும் ரசிகர்களால் வரவேற்கும் படமாகவே உள்ளது. இந்த படத்திற்காக சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது போன்றவற்றை பெற்றார்.
மேலும் அதே போல் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் நடிகர் கமலஹாசன், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக நடிகர் சரத்குமாரை மட்டும் வைத்து, சுமார் 12 படங்கள் இயக்கி உள்ளார். இவர் இயக்கத்தில் இறுதியாக 'லிங்கா' திரைப்படம் வெளியாகியிருந்தது.
பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படமானது தோல்வியைச் சந்தித்ததால் திரைப்படங்கள் இயக்குவதை தவிர்த்து பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தயாரித்து, நடித்திருந்த 'கூகுள் குட்டப்பன்' என்கிற திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும். இதனால் இவர் மிகவும் மனகஷ்டத்தில் உள்ளராம்.
அதனால் குறைவான பட்ஜெட்டில், நல்ல கதையை எடுத்தால் கூட ரசிகர்கள் பெரிய நடிகர்கள் படம் என்றால் மட்டுமே திரையரங்கிற்கு வருவதாகவும், இல்லை என்றால் ஓடிடியில் வெளியாகும்போது படத்தை பார்த்து கொள்ளலாம் என நினைப்பது தான் பல படங்கள் வரவேற்பை பெறாமல் போவதற்கு காரணம். இந்த நிலை மாற வேண்டும். என தன்னுடைய ஆதங்கத்தை நெருங்கிய வட்டாரத்தில் வெளிப்படுத்தி புலம்பி வருகிறாராம்.ஒரு காலத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிகுமாருக்கா... இந்த நிலை? என ரசிகர்கள் புலம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!