தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்னும் திரைப்படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
ரஜினிகாந்த் தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘தலைவர் 169’படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மேலும், இப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் பீஸ்ட் பட ரிலீஸுக்கு பின் இப்படத்தின் கதை விவாதத்தின் போது, நெல்சன் சொன்ன கதை ரஜினிக்குப் பிடிக்கைவ்ல்லை என தெரிகிறது.
இதனால், முத்து, படையப்பா, போன்ற படங்களை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் இப்படத்தின் திரைக்கதை எழுக் கூறியுள்ளதாகவும் அதன்படி அவர் இப்படத்தின் திரைக்கதை எழுதி வருவதாகவும் அதனால் ஷூட்டிங் தள்ளிபோவதாக தகவல் வெளியாகிறது.
Listen News!