விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஷிவாங்கி. தனது வசீகரக் குரலால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிம் மிகவும் பிரபல்யமானார்.
இந்த நிகழ்ச்சியில் மூன்று சீசன்களாக கோமாளியாக பங்குபற்றி வந்த இவர் 4வது சீசனில் குக்காக கலந்து கொண்டு தன்னுடைய சமையலை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார்.கோமாளியாக பல்வேறு கெட்டப்புகளை போட்டு, அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர்,தற்போது குக்காகவும் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
இது தவிர திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றும் நடித்து வருகின்றார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து நடிகர் வடிவேலுவுடன் நாய் சேசர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் சிறப்பான கேரக்டரில் இவரை காண முடிந்தது. தொடர்ந்து காசேதான் கடவுளடா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
When she gets emotional.
The final day on the stage.#Sivaangi #CookWithComali4 @sivaangi_k pic.twitter.com/OyFnXfrvTz
இந்த நிலையில் இன்று குக்வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கான பைனல் எப்பிஷோட் ஒளிபரப்பாகி வருகின்றது.அதில் ஷிவாங்கி குக்வித் கோமாளி செட்டைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.அதாவது இந்த நிகழ்ச்சிக்கு கோமாளியாக வந்ததில் இருந்து தற்பொழுது குக்காக இருந்து வெளியே போறதை நினைக்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஏதோ காலேஜில் இருந்து டிகிரி வாங்கிட்டு போற மாதிரி சந்தோஷமாக இருக்கு என்று எமோஷனலாக பேசியுள்ளார். இவர் பேசியதைக் கேட்டு புகழ் ஆகியோரும் எமோஷனலாகியுள்ளனர் என்பதும் குறி்பிடத்தக்கது.
Listen News!