• Sep 20 2024

திடீரென திருவண்ணாமலைக்கு சென்ற குக்வித் கோமாளி சிவாங்கி- அடடே யாரெல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஷிவாங்கி.இருப்பினும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் பட்டி தொட்டியெல்லாம் பிரபல்யமாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து அண்மையில் முடிவடைந்த குக்வித்கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.


இந்த சீசனில் இணைந்த போட்டியாளர்கள் தற்போதும் தங்களிடையே சுமூகமான உறவை வைத்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா அர்ஜுன் மற்றும் முதல் ரன்னர் அப் தர்ஷன் ஆகியோருடனும் தொடர்ந்து நட்புடன் இருந்த வருகின்றார் சிவாங்கி.


இந்நிலையில் ஸ்ருதிகா குடும்பத்தினர் மற்றும் தர்ஷனுடன் இணைந்து சிவாங்கி திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement