தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இவர் தமிழில் மட்டுமன்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கின்றார். பின்னர் இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்து செட்டில் ஆன குஷ்பூ ஆயினும் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமன்றி ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடாத்தி வருகின்ற இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் சிறப்பாக கையாண்டு வருகிறார். அத்தோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகின்றார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து இவர் நடித்திருந்த 'அண்ணாத்த' படம் இவருக்கு நல்ல பெயரையும் பாராட்டுக்களையும் வாங்கிக் கொடுத்துள்ளது. இதில் இவருக்கு கொடுக்கப்பட்டது சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடித்திருந்தார் குஷ்பூ. ரஜினியின் முன்னாள் ஹீரோயினான குஷ்புவிற்கு இந்த படத்தில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்திருந்தனர்.
இவ்வாறாக எப்போதுமே பிஸியாக இருந்து வருகின்ற குஷ்பூ எப்போதுமே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடிய ஒருவர். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவார். அதிகமாக புடைவை அணிந்த புகைப்படங்களையே இவர் வெளியிட்டு வருவது வழமை.
இந்நிலையில் இவர் சமீபத்தில் மார்டன் ட்ரெஸ் அணிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரை கமெண்டுகளால் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது அப்புகைப்படங்களை வைரலாக்கியும் வருகின்றனர்.
Listen News!