சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும், மகள் ஐஸ்வர்யா இயக்கத்திலும் தற்போது உருவாக உள்ள படம் 'லால் சாலாம்'. லைக்கா பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க இருக்கின்றார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் ஆகியோர் கிரிக்கெட்டர்களாக நடிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சமீபகாலமாக இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. அதிலும் குறிப்பாக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து லைக்கா நிறுவனம் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு மார்ச் 7 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்க உள்ளதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இப்படத்தின் உடைய படப்பிடிப்புகள் ஆரம்பமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!