• Sep 21 2024

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இப்படி- கோலிவுட் வட்டாரத்தில் முகம் சுளிக்கும் பிரபலங்கள்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம்வரும் நம்ம நயனும் . தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் நானும் ரௌடிதான் என்ற படத்தின் மூலம் இணைந்து கொண்டனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்தீபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுக்கும், நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கும் இடையே மலர்ந்த நட்பு காதலாக மாறி இன்று திருமணத்தில் இணையவுள்ளனர்.

இந்நிலையில் ஜூன் 9ஆம் தேதி நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு திருமணமாகவுள்ள நிலையில் இவர்களின் திருமணத்தை வியாபாரம் செய்துள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோவை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்க விலை பேசியுள்ளார்.இந்நிலையில் ஏற்கனவே திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்த தகவல் கான்செல் ஆனது. அந்தவகையில் நயன்தாரா ஓடிடி தளத்தில் தன திருமண வீடியோவை விலை பேசுவதற்காகவே மகாபலிபுரத்தில் தன் திருமணத்தை மாற்றி உள்ளார் என செய்திகள் பரவலாக வெளியாகியுள்ளது.

இந்நிலையில்,தனது திருமணத்தில் கூட வியாபாரம் செய்யும் அளவிற்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இறங்கியுள்ளார்.என்று கோலிவுட் வட்டாரத்தில் முகம் சுளிக்கும் வகையில் பேசி வருகின்றனர்.மேலும் வெங்கடாசலபதியை விட வியாபாரமே பெரியது என்று இருவரும் நினைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் திருமணத்திற்கு பின்பு படவாய்ப்புகள் அதிகமாக வராமல் போக அதிக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தினால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் நயன்தாரா தற்போது இதுபோன்று செய்து வருகின்றார் என்றும், ஒரு சில தரப்பினர் கூறி வருகின்றனர். மேலும் இதுவே தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்குவது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement