• Sep 21 2024

லாகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன்- நியூ லுக்குடன் வெளியான ரிலீஸ் டேட் -குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ்.இவர் ஸ்பீட் டான்சர் என்னும் தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார்.

இவரது நடன திறமை ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இதன் பின்னர் தமிழில் உன்னை கொடு என்னை தருவேன் பார்த்தேன்,ரசித்தேன், பார்த்தாலே பரவசம், அற்புதம் உள்ளிட்ட படங்களில் செகண்ட் ஹிரோ, சிறப்பு தோற்றம் என வந்த இவருக்கும் முனி சரியான ஓப்பனிங்கை தந்துள்ளது.

மேலும் பேய் படத்தை காமெடியாக சொல்லும் இவரது பாணி பிடித்து போகவே முனியை தொடர்ந்து, கஞ்சனா, கஞ்சனா2, கஞ்சனா3 உள்ளிட்ட படைப்புகள் நல்ல வெற்றியை கொடுத்தது. ஆனால் ஹாரர் மூவிகளை தவிர இவர் கொடுத்த மற்ற படங்கள் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்று கொடுத்தது.

கஞ்சனா வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டிலும் இந்த படம் ரீமேக் ஆனாது.மேலும் அக்ஷய் குமார் நடிக்கும் இந்த படத்தையும் ராகவாவே இயக்கினார்.

அத்தோடு லக்சுமி என்னும் பெயருடன் அங்கு வெளியான இந்த படம் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது.இவர் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார்.

கதிரேசன் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியானது. அதில் ரத்தக்களரிக்கு இடையில் ஒருவனை மிதித்தபடி ராகவா லாரன்ஸ் மாஸ் லுக்கில் இருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement